புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருந்த உள்கட்சி பூசலுக்கு, இன்று மாவட்ட அலுவலக சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் ஒரு அதிரடியான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியதால், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டது ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிர வைத்தது.

இந்நிலையில், புதிய நிர்வாகிகளிடம் மாவட்டக் கட்டுப்பாட்டை முறைப்படி ஒப்படைக்கும் வகையில், சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பு நியமித்த புதிய நிர்வாகிகளிடம் இன்று முறைப்படி ஒப்படைத்துள்ளனர்.

எடப்பாடியின் அதிரடி ஆக்ஷனுக்கு முன்னால் மாஜி அமைச்சரின் வியூகங்கள் அனைத்தும் தவிடுபொடியான நிலையில், இந்த சாவி ஒப்படைப்பு விவகாரம் புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.