தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணத்தை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று அந்த தொகையை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும்.

இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் இயக்க ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.