பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் சத்தமிட்டனர். இந்நிலையில் டிரைவர் பேருந்தை  நிறுத்த முயற்சி செய்தபோது பேருந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.