அமெரிக்காவில் அடுத்த வருடம் 2024 நவம்பர் 5-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் தற்போதையிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பாக மீண்டும் போட்டியிட உள்ளார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து தற்போது தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் தன்னுடைய முடிவை வருகிற 15-ஆம் தேதி அதிகார்வபூர்வமாக  அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நிக்கி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் ட்ரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார். கடந்த  2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கி ஹாலே ட்ரம்பின் தீவிர மந்திரவாளராக செயல்பட்டுள்ளார். மேலும் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் என நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில் இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம் நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும் என பேசி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.