தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று நெல்லைக்கு வருகை புரிகிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி குமரி தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தென்காசி மற்றும் தூத்துக்குடி தொகுதிகளின் கூட்டணி வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்தும் பேச இருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.