நாடு முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் வேட்பாளராக களம்  இறக்கப்பட்டுள்ள  தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் பட்டியல் இனத்தவரின் வீட்டிற்கு அண்ணாமலை விருந்துக்கு சென்றார். அங்கு அவர் உரிமையோடு சாப்பாட்டை கேட்டு வாங்கி சாப்பிட்டார். அண்ணாமலை வந்தவுடன் அப்பகுதி மக்கள் அவரை பார்ப்பதற்காக வந்ததால் அப்பகுதியே கலகலவென காணப்பட்டது. அதோடு அண்ணாமலையை அப்பகுதி மக்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர். மேலும் விருந்துக்கு பிறகு அண்ணாமலை அப்பகுதி மக்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.