உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது பூமி பூஜை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நேற்று பிரதமர் மோடி திரும்பிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் வேலை கேட்டு கான்வாய் பின்னால் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அந்த நபர் பிரதமர் வாகனத்தின் பின்னால் 20 மீட்டர் தொலைவில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.