இந்தியாவில் மக்கள் பலரும் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். தபால் நிலையங்களில் சேமிப்பு என்பது மக்களின் பணத்துக்கு உத்திரவாதம் வழங்கும் ஒன்றாக இருப்பதால் பாதுகாப்பான முறையில் இரட்டிப்பு லாபம் அளிக்கும் தபால் நிலைய சேமிப்பு மூலம் பலரும் பயன் அடைந்து வருகின்றனர். அதன்படி தபால் நிலையத்தில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் செலுத்தக்கூடிய பணம் அப்படியே இரண்டு மடங்கு லாபத்துடன் கிடைக்கும்.

அதாவது 5 லட்சம் ரூபாயை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு நீங்கள் செலுத்தினால் 7.5% வட்டி வழங்கப்பட்டு 2,24,974 ரூபாய் வட்டி கிடைக்கும். அதனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு உங்களுடைய கணக்கில் மொத்த பணம் 7,24,974 ரூபாய் இருக்கும். அதனைப் போலவே தபால் நிலையத்தில் பத்து லட்ச ரூபாய் பணத்தை பத்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் 11,02,349 வட்டி செலுத்தப்பட்டு மொத்தம் 21,02,349 ரூபாய் உங்களது வங்கி கணக்கில் இருக்கும்.