சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ATMல் பணம் எடுக்க வந்த முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.90,000 பணத்தை திருடி சென்றுள்ளது ஒரு கும்பல். தஞ்சையை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு 3 பேர் ATMல் பணம் எடுக்க உதவியுள்ளனர். அப்போது அவரது கவனத்தை திசை திருப்பி PIN நம்பரை தெரிந்துகொண்டு போலி ATM கார்டு கொடுத்து அனுப்பியுள்ளனர். பின் அவரது கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளனர். ATMல் தெரியாதவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.