பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூரில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாநில நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்ற யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில்இந்த ஆண்டுக்கான 14 நிகழ்ச்சி நிரலும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசிய அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.  மேலும் 9  தீர்மானங்கள் இக்கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் என்னவென்றால்,

1. ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்றுள்ள பாரத பிரதமருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.  தமிழக சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்து கொண்ட  அராஜகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

3. இராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.

4. பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.

5. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராம பட்டியலின மக்களுக்கு நடந்த கொடுமைக்கு தமிழக திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. காசி தமிழ் சங்கம் தந்த நம் தேச தந்தை பாரத பிரதமர் மோடிக்கு பாராட்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

7. தமிழக விவசாயிகளையும்,  நெசவாளர்களையும் வஞ்சிக்கும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

8. தமிழக தொழில் வளர்ச்சி 8ம் இடத்திற்கு தள்ளப்பட்ட திராவிட மாடல் ஊழல் ஆட்சி என்று குறிப்பிட்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

9. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட நட்டா ஜீ அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் 2 தீர்மானங்கள் மட்டும் பாஜக சார்பாகவும் மற்ற தீர்மானங்கள் திமுகவுக்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.