ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் பிப்,.27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஜி.கே.வாசன் எம்பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “முன்னதாக பிப்ரவரி 27ம் தேதி அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க உடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

கலந்தாலோசனைக்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2021 தேர்தலில் இத்தொகுதி அதிமுக கூட்டணி சார்பாக தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஈரோடு இடைத் தேர்தல் பற்றி தமாகா, அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட த.மா.கா வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதனை த.மா.கா சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது