அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தான் அதிமுக தலைமை யாருக்கு வரும் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வர இருப்பதால் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனிதனி அணியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று டிடிவி தினகரன் அதிரடியாக ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் மட்டும் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னம் காரணமாகவே அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. மேலும் இதை இருவரும் யோசித்து சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று.