பாகிஸ்தானில் சமீப காலமாக அந்த நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போலீசார், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கைபர் பக்டுங்வா மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தில் நவ் சேரா சாலையில் போலீசார் சோதனை சாவடியில் இருந்தபடி தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது சோதனை சாவடியின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடு உள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.