அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்தில் வைத்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016ம் ஆண்டு வரையிலான ஆவணங்கள் ஆகும். அதிபர் ஜோ பைடனின் வீட்டிலிருந்து அரசின் மிக முக்கியமான மற்றும் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் வீட்டில் எஸ்.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் ஏராளமானவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அதிபர் வீட்டில் எஸ்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.