இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலா கி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரத்தில் கோபத்தை வெளிக்காட்டும்.

கொடிய விஷம் உடைய பாம்புகள் கூட மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு தற்போது வந்து இடையூறு அளிப்பது மட்டுமல்லாமல் சமையலறை மற்றும் வாகனம் என பல இடங்களில் பதுங்கி இருந்து அச்சுறுத்துகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் படம் எடுத்து நிற்கும் ராட்சத ராஜ நாகத்தின் தலையில் மாறி மாறி முத்தம் கொடுத்து பெண் ஒருவர் சிலிர்க்க வைத்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பெண் வனவிலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள நிலையில் பல வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aulia Khairunisa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@auliakhairunisa22)