நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

UPI பரிவர்த்தனைகளில் ஏற்படும் தவறுகளால் சில நேரம் பணம் வேறு கணக்குக்கு சென்று விடும். அப்படி ஃபோன் பே, கூகுள் பே மற்றும் பிற UPI பேமெண்ட்டுகளின் போது, வேறு ஒருவருக்கு மாற்றி அனுப்பினால் கவலை வேண்டாம். அவ்வாறு அனுப்பப்படும் பணத்தை மீட்க, npci.org.in என்ற அரசு இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு UPI complaint என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதனுள் Transaction என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் Select issue type என்பதில் incorrectly transferred to another account என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 24 மணி நேரத்தில் உங்கள் புகாரை சரி பார்த்து அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள்.