உத்தரபிரதேசத்தில் திருமணமான அன்றே புதுமணப்பெண் ஒருவர் தனது கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் கணவன் அவளை நெருங்கிய போது, “நீ என்னைத் தொட்டால், உன்னைக் கொன்றுவிடுவேன். நான் ஏற்கனவே இன்னொருவருக்குச் சொந்தமானவள்” என்று அந்தப் பெண் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர், உடனடியாக அந்தப் பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தனர். இருதரப்பு குடும்பத்தினரும் அந்தப் பெண்ணிற்கு எவ்வளவோ அறிவுரை கூறி புரிய வைக்க முயன்றும், அவள் தனது முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
மேலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், இறுதியாக இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே வேறொரு இளைஞருடன் காதல் விவகாரம் இருந்தது தெரியவந்தது. காதலனைப் பிரிய மனமில்லாததால், அவள் தன் கணவனுடன் வாழ மறுத்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் வைத்துப் பேசியும் எந்தவொரு சுமுகமான முடிவும் எட்டப்படாததால், இறுதியாகப் பஞ்சாயத்து கூட்டப்பட்டு திருமணத்தை ரத்து செய்ய இருதரப்பும் பரஸ்பரம் சம்மதித்தனர். அத்துடன், திருமணத்திற்காகச் செய்யப்பட்ட செலவுகள் மற்றும் கொடுக்கப்பட்ட சீர்வரிசைப் பொருட்கள் அனைத்தையும் பெண்ணின் குடும்பத்தினர் கணவன் வீட்டாரிடம் திருப்பி ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர்.
