ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் கூறியதாவது “இரட்டை இலை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரியல்ல. தேர்தல் வாக்குறுதியை 85 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார். கல்வி கடனை ரத்து செய்தார்களா? நீட் தேர்வை ரத்து செய்தார்களா?. பொய் சொல்வதற்கு ஒரு அளவு இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.