குஜராத்தில் நீட் தேர்வில் 705 மதிப்பெண் எடுத்து பிளஸ் டூ பொதுத்தேர்வில் தோல்வியடைந்து துணை தேர்விலும் தோல்வி அடைந்ததால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொது தேர்வில் குஜராத் மாணவி இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். மீண்டும் அவர் ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணை தேர்வு எழுதிய நிலையில் தற்போது தேர்வு முடிவு வெளியான நிலையில் அதிலிலும் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த மாணவி தான் நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் எடுத்து குஜராத்தில் அதிக மதிப்பெண் எடுத்தவராக அறியப்பட்டார். நீட் தேர்வு மதிப்பெண் தான் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு அடிப்படை என்றால் இப்போது மத்திய அரசு இந்த மாணவிக்கு கல்லூரியில் சேர்க்கை அளிக்குமா? என்று நீட் தேர்வில் தோல்வியடைந்து பொது தேர்வில் முழு மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு ஒரு பக்கம் சந்தேகத்தை எழுப்ப, ஒரு சாதாரண பொது தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி கூட பெற முடியாத நிலையில் எவ்வாறு நீட் தேர்வில் 705 மதிப்பெண் எடுத்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தும் படி வலியுறுத்துகிறார்கள். ஒருவேளை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பயிற்சி மையம் மூலம் படித்து நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டு +2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.