உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பணிபுரியை பெங்களூரை சேர்ந்த பானி பூரி வியாபாரி தங்கம் மற்றும் வெள்ளி பானிபூறியை விற்பனை செய்து வருகின்றார். பொதுவாகவே பானி பூரி வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையுடன் புதினா, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் என பல்வேறு விதமான மசாலாக்கள் சேர்த்து காரமான நீரின் கலவையை ஊற்றி சாப்பிடக் கூடியது. இந்த நிலையில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் பாணி பூரி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பெங்களூரை சேர்ந்த பானிபூரி வியாபாரி ஒருவர் விற்பனை செய்கிறார். அதில் தங்க நிற தட்டு மற்றும் கண்ணாடிகளின் மேல் பூரிகள் வைக்கப்பட்டுள்ளது. அவை தங்க நிற குடுவைகளின் மீது அழகாக வைக்கப்படுகின்றது. பூரிகளில் நட்ஸ் மற்றும் தேன் ஆகியவை நிரப்பப்பட்டு பிறகு பூரிகளின் மீது உண்ணக்கூடிய தங்கம் மற்றும் வெள்ளியின் தாள்கள் வைக்கப்படுகின்றன. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Khushbu Parmar | Manan | CTT இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cherishing_the_taste_)