முன்னதாக ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்று அண்ணாமலை பேசியிருந்தார். இதனால் கொந்தளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கத்துக்குட்டியான அண்ணாமலை அடிக்கடி அதிமுக மீது சேற்றை வாரி தெளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. அவர் மாநிலத் தலைவர் பதவிக்கே தகுதியற்றவர். அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று கடுமையா விமர்சனம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அதுகுறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், “நாவடக்கம் அனைவருக்குமே தேவைதான்” என்று கூறியிருக்கிறார்.