ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக இலங்கை, நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் புத்த பூர்ணிமா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு மே ஐந்தாம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்பட உள்ளதால் மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் வெகு விமர்சையாக இந்த விழா கொண்டாடப்படும்.
இந்த விழாவை முன்னிட்டு மாநில அரசுகள் பொது விடுமுறையை அறிவித்து வருகின்றன. அவ்வகையில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே ஐந்தாம் தேதி நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால் மற்ற அவசர பிரிவு சேவைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.