மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் திருமணத்திற்கான செலவுகளை கருத்திக்கொண்டு திருமண உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச அரசு கடந்த 2017 ஆம் வருடம் முதலமைச்சரின் வெகுஜன திருமண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த தகுதியுடையவர்கள் அரசு சார்பாக கொடுக்கப்படும் 51 ஆயிரம் திருமண உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் முதல் கட்டமாக திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க மணமகனின் வங்கிக்கணக்கில் 35 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். அதன் பிறகு திருமணத்தின் போது பத்தாயிரம் ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன் திருமண ஜோடிகளுக்கு திருமண விழாவில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக 6000 ரூபாய் என மொத்தமாக 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.