நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது வரும் மே ஏழாம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை சார்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முடிவானது மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நீட் தேர்வு மே 7ஆம் தேதி வெளியாக இருப்பதால் எட்டாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வு நடக்க இருக்கும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று புகார் எழுந்தது. ஜம்மு காஷ்மீரில் மே மூன்றாம் தேதி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருப்பதால் மே 7ஆம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்விற்கு அவர்களால் சரியாக தயாராக முடியாது. அது மட்டும் இல்லாமல் மே 6 மற்றும் எட்டாம் தேதிகளிலும் தேர்வு இருப்பதன் காரணத்தினால் குறைந்தது தேர்வு முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.