ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான தேதியை வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி உச்சநீதிமன்ற உத்தரப்பின்படி ஓய்வூதியம் பெறுவோர்/ உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பம் மற்றும் கூட்டு விண்ணப்பத்தை சரி பார்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை EPFO செய்துள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செயல் முறையை எளிதாக்க ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைன் வசதி மே மூன்றாம் தேதி அதாவது இன்று வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.