நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிடைத்தால் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்ற நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் நிலையில் மே எட்டாம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு தேதி, அதனைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் வகுப்புகளை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளும் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.