ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 70 முதல் 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடித்ததாகவும் சுமார் 200 பேரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள புதுப்பிக்கப்படாத பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் இரும்பு பாதைகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம் என்று DREU மூத்த தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரயில் விபத்துக்களை தவிர்க்க ஆண்டதோறும் குறைந்தபட்சமாக 7000 கிலோமீட்டர் ரயில் தண்டவாளங்களை புதுப்பிக்க வேண்டும். இதற்கு ரயில்வேக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.