பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மே 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். ரயில்வே, வங்கிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என சுமார் மூன்று கோடி பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு செவி சாய்த்து இவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.