தென்கொரியாவில் அவசரநிலை அமலுக்கு வருவதாக அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார். தென்கொரியாவில் திடீரென நள்ளிரவில் அவசர நிலையை அதிபர் பிரகடனம் செய்துள்ளார் . இதனால் அங்கு ராணுவ சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய படைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் உள்நாட்டு தேசவிரோத சக்திகளை ஒழிக்கவும் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக தொலைக்காட்சி வாயிலாக அதிபர் உரையாற்றியுள்ளார். மேலும் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுக்கு ஆதரவாக இருப்பதாக அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். வடகொரியாவின் எதிர்கட்சி எம்பிக்கள், மேயர்கள் கைது செய்யப்பட்டனர்.