புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனமானது வழக்கம்போல டூடுலை வெளியிட்டு உள்ளது. எனினும் நடப்பு ஆண்டு டூடுலில், கூகுள் நிறுவனமானது ஒரு சர்ப்ரைஸை ஒளித்து வைத்திருக்கிறது. அதாவது கூகுள் டூடுல் லோகோவை கிளிக் செய்தால் அந்த பக்கம் லோட் ஆன பிறகு, புத்தாண்டை வரவேற்கும் வகையில் கலர்பேப்பர்கள் உங்களின் கணினி திரை (அ) மொபைல் திரைகளில் முழுவதும் வெடித்துச் சிதறும்.

ஒரு வேளை அந்த கலர்பேப்பர்கள் உங்களுக்கு போதவில்லை எனில், கணினியின் தேடுபொறிக்கு இடது பக்கமும், மொபைல் தேடுபொறிக்கு வலது பக்கமும் உள்ள கலர் பேப்பர் கோனை அழுத்தினால் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கலர் பேப்பர்கள் வந்துகொண்டே இருக்கும். இதனை உங்களது சிறுவயது குழந்தைகளிடம் கொண்டு சென்று காட்டினால் இன்று முழுவதும் நீங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாகிவிடுவீர்கள்..