இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளது. இத்தகைய ஆவணங்களை மிகவும் பாதுகாப்பாகவும் சரியாகவும் வைத்திருக்க வேண்டும். அதே சமயம் இந்த ஆவணங்களில் அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். இந்த அப்டேட்டை வீட்டில் இருந்து கொண்டே எளிதாக ஆன்லைனில் நீங்கள் முடித்து விடலாம்.

ரேஷன் கார்டில் அப்டேட்:

  • ரேஷன் கார்டை அப்டேட் செய்வதற்கு https://epds.nic.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் Ration Card Correction என்பதை கிளிக் செய்து ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களை சரியாக உள்ளிட்டு Search என்பதை கிளிக் செய்து ரேஷன் கார்டு விவரங்களில் தேவையான மாற்றங்களை செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை Application Status என்ற தேர்வை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அப்டேட்:    

  • ஆதார் கார்டை அப்டேட் செய்ய  uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று Aadhar Update என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் தோன்றும் பக்கத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலை அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • நீங்கள் சமர்ப்பிக்க பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மைய அதிகாரி சரிபார்த்தப் பிறகுஉங்களுடைய  ஆதாரானது அப்டேட் செய்யப்படும்.
  • இதற்கு நீங்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் .