நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை என மன்சூர் அலிகான் தரப்பு தெரிவித்தது. மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.