பேருந்துகளில் டிக்கெட்டுக்கு பதிலாக பயணச்சீட்டு என்று கேளுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேருந்துகளின் நடத்துனர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள், பேருந்துகளில் டிக்கெட், டிக்கெட் என்று பயணிகளிடம் கேட்பதற்கு மாறாக பயணச்சீட்டு, பயணச்சீட்டு என்று கேளுங்கள்.

சிறிய முயற்சி கூட பெரிய மாற்றங்களுக்கு வித்தாகக் கூடும். அன்னைத் தமிழுக்கு உங்களாலும் சேவை செய்ய முடியும் என பதிவிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கடைகளின் பெயர்களும், பெயர் பலகைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.