கூகுளின் ஆண்ட்ராய்டு அல்லது வியர் இயங்குதளங்களில் யூசர் இடையே மொபைல் ஆன்லைனில் இருக்கும்போது மொபைலின் லொகேஷனை ட்ராக் செய்வதற்கு “பைண்ட் மை டிவைஸ்” வசதி உதவுகிறது. ஆனால் மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட இந்த பைண்ட் மை டிவைஸ் வசதியை பயன்படுத்தி மொபைலை ட்ராக் செய்வதற்கான வசதி விரைவில் வரும் என கூகுள் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டிசம்பர் 22 சேன்ஜ் லாகில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தற்போது பைண்ட் மை டிவைஸ் மூலமாக மொபைலில் என்கிரிப்டட் இருந்த  லொகேஷனை நம்மால் ட்ராக் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இனி உங்களுடைய மொபைல் ஆன்லைனில் இல்லாவிட்டாலும் கூட மொபைல் கடைசியாக ஆக்டிவாக இருந்த லொகேஷனை ஆஃப்லைனிலேயே நம்மால் பார்த்துக் கொள்ள முடியும் என்பதாகும். இந்நிலையில் தற்போது வரை ஆண்ட்ராய்டு வியர் ஓ எஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தி வரும் டிவைஸ்கள் அனைத்தும் ஆன்லைனில் இன்டர்நெட்டில் இணைந்து இருந்தால் மட்டுமே அதில் லொகேஷனை சரியாக பார்த்துக் கொள்ள முடியும். ஒரு வேளை அவ்வாறு லொகேஷனை டிராக் செய்தாலும் நம்மால் டிவைஸை லாக் செய்ய முடியும்.

மேலும் நம்முடைய அக்கவுண்டை சைன் அவுட் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் மொத்த டேட்டாவையும் ஃபார்மேட் செய்ய முடியும். இந்த மூன்று விதமான வசதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் டிவைஸ் ஆனது ரிமோட் மூலம் ஃபார்மேட் செய்யப்படும் சமயத்தில் அதன் பின் மீண்டும் எப்போதும் உங்களால் டிவைஸ் சர்வீஸை பயன்படுத்தி உங்கள் மொபைலில் கண்டுபிடிக்க முடியாது. உங்களது மொபைலை வைத்து யாராவது மொபைலை ரீசெட் செய்தாலும் பைண்ட் மை டிவைஸ் செயலி வேலை செய்யாது. இதுபோன்ற காரணங்கள் தான் தன்னுடைய புதிய அப்டேட்டாக ஆண்ட்ராய்டு மட்டும் வியர் ஓ எஸ் இயங்குதளங்களில் இனிவரும் காலங்களில் மொபைல் போன் திருடு போனாலோ  அல்லது காணாமல் போனாலோ  ஆன்லைனிலேயே அதன் லொகேஷனை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் சாம்சங் மற்றும் ஆப்பிள் டிவைஸ்களில் உள்ளது போல இவை என்கிரிப்டட் செய்து செய்யப்பட்டுள்ளதால் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களது மொபைலில் லொகேஷனை தெரிந்து கொள்ள முடியாது என்பது இதன் கூடுதல் வசதியாகும். இந்நிலையில் தற்போது வரை கூகுள் எப்போது இந்த வசதியை அறிமுகப்படுத்தப் போகிறது என்பது குறித்து சரியான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. மேலும் டிசம்பர் மாத இறுதிக்குள் தனது இறுதி கட்ட சோதனையை முடித்து ஆண்ட்ராய்டு 14 வருஷம் உடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.