திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று காலை ரேவதி தூக்க கலக்கத்தில் பற்பசை என்று நினைத்து எலிக்கு வைக்கப்படும் பசையை வைத்து பல் துலக்கியுள்ளார்.

அதன் பிறகு வேலைக்குச் சென்ற ரேவதி மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.