பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை, இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும் இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது என கிண்டல் செய்த உதயநிதி, ரோடு ஷோ செல்லும் மோடியை மக்கள் ரோட்டுக்குத்தான் அனுப்பப் போகிறார்கள் என்றும் கடுமையாக சாடினார்.