மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அவர் தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு க அழகிரி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மீண்டும் கட்சியில் இணைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது.