தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜமாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரியசாமி(50) என்பவருக்கும் விவசாய நிலங்களின் வரப்பு தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜமாணிக்கம் மற்றும் அவரது தாய் பழனியம்மாள் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பெரியசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.