இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “தலைவர் 170” திரைப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் படக்குழு படத்தின் முதல் ஷெட்யூலுக்காக கேரளாவுக்கு சென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில், இப்பொது ரஜினியின் புதிய தோற்றம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் “தலைவர் 170” படத்தில் அமிதாப் பச்சன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.