கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் ஃபாரஸ்ட் நோயால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்று முதல் எட்டு நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடும் உடல் வலி இருக்கும். மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் தட்டணுக்கள் குறைந்து பாதிக்கப்படுவார்கள். இது போன்ற அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.