தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனி மொத்தமாகவோ, சில்லறையாகவோ யாரும் இப்படியான எலி மருந்துகளை விற்கக் கூடாது. அதேபோல மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 6 பூச்சி மருந்துகளையும் அரசு தடை செய்துள்ளது. மக்களை இவற்றை தற்கொலைக்கு பயன்படுத்துவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.