தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தற்போது புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக அரசு புதிய முன்னெடுப்பை எடுத்திருக்கிறது.

அந்த அடிப்படையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை உயர்கல்விக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய என்எஸ்எஸ் மாணவர்கள் பள்ளிகளுக்கே வந்து உதவுவார்கள். அதுமட்டுமின்றி உயர் கல்விக்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்து கூறுவார்கள். அதாவது இடைநிற்றலை தடுப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.