தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு இது தொடர்பாக பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு 8,600 முதல் 29 ஆயிரம் ரூபாய் வரையும், கட்டுனர்களுக்கு 7800 முதல் 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.