தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும். உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை வருடம் தோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே அதற்கான தடுப்பு ஊசியை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்பது வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை திரட்டி வருவதாகவும் விரைவில் மத்திய அரசு சார்பாக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பிறகு அதனை மாணவிகளுக்கு அங்கன்வாடி மையங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.