தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாநிலத்தில் இரண்டு புள்ளி 60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு இந்த முகாமை தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு வருடமும் தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த இரண்டு நாட்களில் அல்லது அந்த வாரங்களில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். இந்த ஆண்டு தகுதியான அளவிற்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள்,பொது இடங்கள் மற்றும் மக்கள் கொடும் பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.