இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பு மோசடி நடைபெற்ற வருவதால் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் 450 ரூபாய் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று கவர்ச்சிகரமான மோசடி விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

இந்த விளம்பரத்தை நம்பி வேலைக்கு விண்ணப்பம் செய்வார்கள் பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் முப்பது மோசடி வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த வகை மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு இணையதளங்களில் வேலை தேடுவோரும் தொழில் செய்ய முதலீடு செய்வோரும் நன்கு அறியப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை மட்டுமே நம்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறையான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே கட்டணம் அல்லது டெபாசிட் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. பயிற்சி அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டால் அது மோசடியாக இருக்கலாம். எனவே மோசடியில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஒருவேளை மோசடியில் சிக்கினால் 1930 என்ற இலவச தொலைபேசி உதவி என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.