தமிழ்நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுமார் 1.15 கோடி பேர் பயன் பெற்று வரும் நிலையில் தற்போது 1.27 லட்சம் பெண்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் வரையில் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பயனாளிகளின் எண்ணிக்கை 1. 15 கோடியில் இருந்து 1.14 கோடியாக குறைந்துள்ளது. இந்த திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒரு மாதத்திற்கு தமிழ்நாட்டில் 22,000 இறப்புகள் பதிவாகிறது. இதன் மூலம் இறந்த பிறகு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு அதிக பணம், நிலம் வாங்குதல், அரசு வேலைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களின் வங்கி கணக்குகள், வருமான வரி கணக்குகள் மற்றும் வாகன பதிவுகள் போன்றவைகள் மாதந்தோறும் சமூக பாதுகாப்பு ஆணையரால் கண்காணிக்கப்பட்ட அறிக்கை வழங்கப்படுகிறது. மேலும் கடந்த அக்டோபர் மாதத்தின் மூலம் இந்த திட்டத்தின் மூலம் 1140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.