தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முக மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் விதமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 16 நாளை சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3000 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள சேவை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.