தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலில் இன்று திருவிழா நடைபெற உள்ளதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணகி கோவில் திருவிழா ஏற்பாடு குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த உள்ளூர் விடுமுறையில் அரசு கருவூலாக அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனவும் மற்ற அலுவலகங்கள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.