தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில் நாளை முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒன்பது நாட்கள் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை நாகர்கோவில் மதுரை திருச்சி விழுப்புரம் தஞ்சை கோவை ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இன்று 500 சிறப்பு பேருந்துகளும் நாளை 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC என்ற செயலியில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.